முக்கிய நிகழ்வுகள்
ஆரல்வாய்மொழி பகுதிகளில் இளைஞர்கள் ஒன்றிணைத்து நடத்தும் முக்கியமான நிகழ்வுகளை இந்த அறிவிப்பு முகப்பு மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஆரல்வாய்மொழி பெயர் காரணம்
நமது ஊருக்கு பல பெயர் உண்டு. பண்டு பாண்டியிலுள்ள படை வந்த காலத்து தீர்வைத்தலமாதலாலும் , கோட்டைவாயில் ஆதலாலும், வெளிநாட்டாரை கண்டறிய ஒரு வாய்மொழி வாக்கியம் சொல்ல வேண்டுமாம்.
“ஆரைவாய்மொழி கோட்டையிலே உழக்காழாக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்”
“ஆறுவாமொளிக் கோட்டையிலே உளக்காளாக்கு நெல்லுக்கு ஏளு வாளைப்பளம்”
என்று தவறாக கூறுவதை வைத்து , அவர்கள் வெளிநாட்டவர் என்று கண்டறிந்து அவர்களை கோட்டைக்கு உள்ளே விடாமலிருந்தார்களாம். அப்போது படைகள் பல வந்து குழப்பம் உண்டு பண்ணும் காலமாய் இருந்ததால் இவ்வாறு சோதித்தார்களாம். ஆரைவாய்மொழி என்னும் பெயரே பண்டைக்காலம் முதற்கொண்டு வழங்கி வந்திருக்கிறது.இந்த ஆரைவாய்மொழி என்னும் பெயரே நாளடைவில் ஆரல்வாய்மொழி என்று உருப்பெற்றுள்ளது..
முப்பந்தல் பெயர் காரணம்
சேர நாட்டைச் சேர்ந்த சங்ககால பெண்பால் புலவர் ஔவையார். சேரர் ,சோழர், பாண்டியர்களிடையே ஒற்றுமை குன்றி, இவர்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளை கைப்பற்றும் பொருட்டு வேற்றசர்கள் படையெடுக்க எடுக்க திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த ஔவையார் மூவேந்தர்களிடத்திலும் தகவலை கூறினார். மூன்று பேர் ஒற்றுமையாக இருந்தால் , எதிரிகள் படையெடுத்து வர அஞ்சுவர் என்பதை கூறி, மூவேந்தர்களையும் ஓரிடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த இடம் பொதுவான இடமாக இருக்க வேண்டுமென்று மூன்று மன்னர்களும் சொல்ல, ஆய் மன்னர் ஆண்டு வந்த ஒரு கானகத்தை தேர்வு செய்த ஔவையார் , அங்கே தனக்கென்று ஒரு குடில் அமைத்து, அங்கே தங்கியிருந்த சேர மன்னன் ஆய் சிற்றரசன் ஆகியோரின் ஆதரவுடன் அரண்மனை பணியாட்களால் அங்கேயே மூன்று மன்னர்கள் சந்திக்கும் பொருட்டு, மூன்று பந்தல்கள் அமைக்கப்பட்டது. அதுதான் தற்போதைய முப்பந்தல்.
மூன்று மன்னர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. அருகே இருந்த சேர மன்னன் முதலாவதாக வந்து சேர்ந்துவிட்டான். வரும்போது தனது போர்க்கள வழிபாட்டு தெய்வமான இசக்கி அம்மன் சிலையை கொண்டு வந்து, தனது பந்தலில் வடக்கு நோக்கி வைத்தான். அடுத்ததாக வந்த பாண்டிய மன்னன் தனது தெய்வமான மீனாட்சி சுந்தரேஸ்வரரின் சிலை வடிவங்களைக் கொண்டு வந்தான் . சேர மன்னன் தனது தெய்வம் உக்கிர சக்தி கொண்டது என்று கூறியதும், முப்பந்தல் பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள, தற்போதைய ஆரல்வாய்மொழியில் வைத்தார். அதன் பின்பு வந்த சோழ மன்னன் தனது போர்க்கள தெய்வமான மாரியை அதே ஆரல்வாய்மொழியில் தற்போதுள்ள பஸ் நிறுத்தம் முன்பு வைத்தார். மூவேந்தர்களிடையே பேச்சுவார்த்தை முடிந்து மன்னர்கள் புறப்படலாகினர்.
அப்போது சேர மன்னன் தான் கொண்டு வந்த சிலையை எடுக்க முற்பட்டபோது இசக்கியம்மன் எனக்கு இந்த இடம் பிடித்து விட்டது. நான் இங்கே இருக்கிறேன் நீ செல் தைரியமாகப் போ, உன் துணையாக நான் வருவேன் என்று அசரீரியாகக் கூறியது. அதன் பின்னர் மூவேந்தர்களும் தங்கள் வழிபாட்டு தெய்வங்களை விட்டு சென்றனர். அன்று தனது குடிலில் தங்கிய ஔவை, மறுநாள் இசக்கிக்கு பூஜை நடந்து முடிந்த நேரம் அவ்விடம் வந்தாள். நான் அனுதினமும் வழிபடும் அந்த சதா சிவனின் இடப்பாகம் அமைந்திருக்கும் உமையாளா நீ, நம்பமுடியவில்லை, கண்களை மிரட்டி நாக்கை நீட்டி கோரப்பற்களை காட்டி நிற்கின்றாய். ஏன் இந்த உக்கிர தோற்றம் ,மங்களகரமாக காட்சி தரக்கூடாதா என்று கேட்டதும் சிலையில் இருந்து ஒரு ஒளித் தோற்றம் அப்பயே இவ்விடம் உற்று நோக்கு என்று குரல் கேட்க, பார்த்தாள் ஔவை, அப்போது செம்பட்டு அணிந்து, செந்தூர திலகமிட்டு இடுப்பில் ஒட்டியாணம் நெத்திசுட்டி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பொன்னிற மேனியாக ,புன்னகை சிந்தும் முகமும் பின்னி முடித்த நீள கூந்தலும் கொண்டு நின்ற கோலத்தில் காட்சியளித்தால் இசக்கியம்மன்.
முகம் மலர்ந்த அவ்வை “தேவி என்றும் சாந்த ரூபிணியா , இப்படி கல்யாண சுந்தரியாக இருக்க வேண்டும்” என்று கூறினாள். அப்போது பேசிய இசக்கியம்மன், அப்படியே நான் எப்போதும் அவ்வாறு இருந்தால் உன்னை போன்றோரைக் காப்பது யார் ? நீதி தலை தூக்கும் போது நான் ஆங்கார ரூபிணியாகவும் மற்ற நேரங்களில் சாந்தினியாகவும் இருப்பேன்,அதை எப்படி நான் பார்க்க முடியும் என்று அவை கேட்க, ஏன், இவ்விடமே இருந்து பார். நீ சைவத்தை மட்டுமே விரும்புவதால் உனக்கு முன் பூஜை எனக்கு பின் பூஜை என்றுரைத்த இசக்கியம்மன் அவ்விடம் விட்டு மறைந்தாள். காலங்கள் பல உருண்டோட கோயில யாரும் கண்டுகொள்ளாமல் போனார்கள். பாழடைந்த நிலையில் கோயில் இருந்தபோது, அந்த காலத்தில் புல் அறுக்க வந்த பெண் ஒருத்தியின் முதுகில் யாரோ ஒருவர் அடித்தது போல் இருக்க, அன்றிலிருந்து நோய்வாய்ப்பட்ட அந்த பெண்ணை குணப்படுத்த வைத்தியர்கள் முயன்றும் முடியாமல் போக, குறத்தியை அழைத்து குறி கேட்டனர் அப்போது அவள் முப்பந்தலில் உள்ள இசக்கியம்மனுக்கு சேவல் பலியிட்டு பொங்கல் வைத்தால் குணமாகும் என்று கூற அதன்படி அவர்கள் பூச்சித்தால் அந்த பெண் குணமடைந்தால் இந்த தகவல் அக்கம் பக்கம் பரவ நாளடைவில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க அப்பகுதியை ஆண்ட சிற்றரசன் அம்மனுக்கு ஓடு வேயப்பட்ட சிறிய கோயிலை கட்டினான்.
வாலிபர் சங்க நூல் நிலையம் Click Here to View Books
29-01-1953 (70 வருடங்களுக்கு முன்னாள்) அன்றைய வாலிபர்கள் ஒன்றிணைந்து பல கனவுகளுடன் உருவாக்கப்பட்டது தான் இந்த வாலிபர் சங்க நூல் நிலையம். அடிக்கல் நாட்டியவர் A. சிதம்பரநாத நாடார் BA, BL. இந்த வாலிபர் சங்கநூல் நிலையத்தை 18-02-1957 ஆம் ஆண்டு திரு ஏ நேசமணி அவர்கள் திறந்து வைத்தார்.
71 வருடங்களுக்கு முன்பு அன்றே வாலிபர்கள் பல கனவுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த வாலிபர் சங்கநூல் நிலையத்தை, இன்றைய வாலிபர்கள் ஒன்றிணைந்து அதனை புதுப்பித்து மீண்டும் புதுப்பொலிவுடன், நவீன மையத்துடன் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக முடிவுசெய்து 29/01/23 அன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொது மக்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
வருங்கால சந்ததிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு IAS , IPS,வங்கித் தேர்வு மற்றும் மத்திய மாநில அரசுத் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி உங்கள் கனவை நினைவாக்கி கொள்ளுமாறு வாலிபர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Click Here to View Books
புகைப்படங்கள்
வாலிபர் சங்க நூல் நிலையத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தின் போது வாராந்திர போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...
விளையாட்டில் நம்ம ஊரு Hero's
தொடர்புக்கு
ஒரு கேள்வி உள்ளதா? நாங்கள் உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறோம். எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், நாங்கள் கூடிய விரைவில் பதிலளிப்போம்.
Location:
பெருமாள்புரம், ஆரல்வாய்மொழி, தமிழ்நாடு 629 301
Email:
Call:
+91 9790906925